கோயம்பேடு சந்தையில் 16 பேருக்கு கொரோனா தொற்று

கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்ட்டவர்களால் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2162-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக768 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனிடையே சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மூவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

காய்கறி வியாபாரி, பூ வியாபாரி, பழ வியாபாரி, கூலித்தொழிலாளிகள் என கோயம்பேடு மார்கெட்டில் இயங்கி வந்தவர்கள் என்பதால் இவர்களுடன் மறைமுகமான தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிப்புக்குள் கொண்டு வருவது சவாலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் வியாபாரி, ஒரு காவலர், ஒரு மாணவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில், கொத்தமல்லி வியாபாரி மூலம் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

சந்தையில் உள்ள பழ வியாபாரி மூலம் அவருடைய மகன் (மருத்துவ மாணவர்) ஒருவருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது.

இதன் மூலம் கோயம்பேடு சந்தையில் நேரடியாக தொற்று உறுதி செய்யப்பட்ட 8 நபர்கள் மூலம், தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே