சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா..!

சென்னையில் 98 சதவிகிதம் அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “4,900 தள்ளு வண்டிகளும், 1182 சிறிய நடமாடும் விற்பனையகம் மூலம் தினமும் 800 – 1000 டன் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகளும், 425.4 மெட்ரிக் டன் காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

மேலும்,கோயம்பேடு சந்தையில் பாதுகாப்புக் கருதி சில்லரை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாதவரம் பேருந்து நிலையத்தில் சந்தை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் ஆணையர் பிரகாஷ் பேசுகையில், சென்னையில் 98 சதவிகிதம் நபருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டு உள்ளது என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே