பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 6400பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தமிழகத்திலும் 834 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8பேர் பலியாகியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பஞ்சாபில் 106 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் மாநில அரசு மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இதனை முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே