ரேஷன் கடைகளில் 19 மளிகைப் பொருட்கள் ரூ.500க்கு விற்பனை செய்ய அரசு முடிவு

நியாய விலைக்கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ 500 க்கு 19 வகையிலான மளிகைப் பொருட்களை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப்பொருட்கள் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மாவட்டம் வாரியாக மேற்கண்ட பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மண்டல கூட்டுறவு பண்டக சாலைக்கு அனுப்பப்படும்.

அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கண்ட மளிகைப்பொருட்கள் விற்பனை விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே