சுயமரியாதை முறைப்படி நாடு கடந்து இணைந்த காதல் ஜோடி

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கும், சுவீடன் பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நாமக்கல் அருகே காதல் திருமணம் நடைபெற்றது. 

திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சண்முகவேல் – தமிழரசி. இவர்களின் மகனான தரணி, பட்டப்படிப்பை முடித்துவிட்டு சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

அங்கு காதல், மொழி, மதம், நாடு ஆகியவை இல்லை என்பது போல அவருக்கும் சுவீடன் நாட்டின் மரினா சூசேன் என்பருக்கும் காதல் மலர்ந்துள்ளது. 

இதையடுத்து தனது பெற்றோர்களிடம் கூற முடிவெடுத்த இருவருக்கும் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.

எனவே, இரு வீட்டார் சம்மதத்துடன் சாணார்பாளையத்தில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.

நாடு கடந்து இணைந்த இந்த தம்பதிக்கு இந்து, கிறிஸ்தவம் மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன. 

இதில் பாரம்பரிய உடை அணிந்தவாறு இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே