காலணியை கழற்றவைத்த விவகாரம் : சிறுவன் குடும்பத்துடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்திப்பு

காலணியை கழற்ற வைத்ததற்கு எதிராக சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிறுவனை குடும்பத்துடன் நேரில் அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்திப்பு நடத்தி வருகிறார். 

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளுக்கான நல வாழ்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.

அப்போது கோயிலுக்குள் நடக்கவிருந்த பூஜைக்காக அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தான் அணிந்திருந்த காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

உடனே அந்த சிறுவன் அமைச்சரின் காலணியை கழற்றினான். 

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செருப்பை கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூறி பாதிக்கப்பட்ட சிறுவன் மசினிகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தோடு அழைத்து சந்திப்பு நடத்தி வருகிறார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே