சசிகலாவுடன் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா சந்திப்பு..!!

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், திடீரென்று சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், இயக்குநர் பாரதிராஜாவும் சந்தித்துள்ளனர்.

சென்னை தி.நகர் இல்லத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நடிகர் சரத்குமாரும், ராதிகா சரத்குமார் இருவரும் சந்தித்து விட்டு சென்ற நிலையில், நாம் தமிழர் சீமானும், இயக்குநர் பாரதிராஜாவும் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே