தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1204 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கண்காணிப்பில் இருந்தவர்கள்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.
குணமடைந்த பின்னரும் கட்டாயமாக அவர்களை மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கிறோம்.
அதனால், அவர்கள் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. பின்னடைவே இல்லை.