நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் விமான சேவையும் மே 3 வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) காலை அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்தது.
இந்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை ரத்தும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையின்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடரக் கூடாது என மாநில முதல்வர்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.