செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாக குறைப்பு..!!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

2015 பெரு வெள்ளத்துக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி மீது மக்களுக்கு பயம் குறையவில்லை.

புயல், அதிக மழை என்று கூறியதும் சென்னை மக்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தது செம்பரம்பாக்கம் ஏரிதான்.

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி நெருங்கினால் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு முதலில் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.

ஆயிரம் கன அடி படிப்படியாக உயர்த்தப்பட்டது இரவு 9 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. அது காலை 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9,300 கன அடியாக உயர்த்தப்பட்டது.

பின்னர் காலையில் மழை இல்லாததாலும், ஏரிக்கும் நீர் வரத்து குறைந்ததாலும் 5 ஆயிரம் கன அடியாக நீர் திரப்பு குறைக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டு தற்போது 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே