#BREAKING : உச்சத்தில் தங்கம் விலை – கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.5,351க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று மேலும் உயர்ந்து 43 ஆயிரத்தைத் நெருங்கியுள்ளது. பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், 2020 ஜனவரி முதல் தற்போது வரையிலான கடந்த ஏழு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.12,072 வரை உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, சா்வதேச பொருளாதாரத்தில் மந்தமும், தொழில்துறையில் பெரிய தேக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைக் கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா்.

இதைத்தொடா்ந்து, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் தொடா்ந்து 14-ஆவது நாளாக நேற்று சவரனுக்கு கிட்டத்தட்ட ரூபாய் ஆயிரம் உயா்ந்து ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை ஆகஸ்ட் 06-ம் தேதி காலை நிலவரப்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.27 உயர்ந்து ரூ,5351-க்கும், ஒரு சவரன் ரூ.216 உயர்ந்து ரூ.42,808 ஆகவும் விற்பனையாகிறது.

இதுபோல, வெள்ளி விலையும் மிகப்பெரிய உயா்வை சந்தித்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.10 காசுகள் உயா்ந்து, ரூ.79.30-க்கும், கட்டி வெள்ளி ரூ.79,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்……………………… 5,351

1 சவரன் தங்கம்………………………….42,808

1 கிராம் வெள்ளி………………………..79.30

1 கிலோ வெள்ளி………………………..79,300

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்…………………………. 5,324

1 சவரன் தங்கம்…………………………. 42,592

1 கிராம் வெள்ளி……………………….. 79.20

1 கிலோ வெள்ளி……………………….79,200

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே