கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இன்று வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் முத்துலட்சுமி கூறுகையில், “தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மக்களுக்காக வைக்கும் கோரிக்கைத் திட்டங்களை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சதாசிவம் கமிட்டி கூறியபடி வீரப்பன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என சேலம் மாநாட்டில் கோரிக்கை வைத்துள்ளோம்.
என் கணவரின் அண்ணன் மாதையன் உள்பட சிறையில் இருக்கும் நான்குபேரையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக தமிழகம் இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய், கர்நாடக அரசு இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் ஏற்கெனவே கொடுத்திருக்கிறார்கள்.
குமரி மாவட்டம் வந்த முத்துலட்சுமி
ராஜ்குமார் கடத்தலின்போது தமிழக அரசு ஐந்து கோடியும், கர்நாடகா அரசு ஐந்து கோடியும் கொடுப்பதாகத்தான் கூட்டிக்கொண்டு வந்தனர். சதாசிவம் கமிஷன் அமைச்சு அந்த பணத்தை கொடுப்பதாகச் சொன்னாரகள்.
அது முழுமையாக இன்னும் நிறைவேறவில்லை. அந்த விசாரணையைப் பாதியில முடிச்சு ஹியூமன் ரைட்ஸ்க்கு ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கலாம் என தற்போது நேஷனல் ஹியூமன் ரைட்ஸ் கூறியுள்ளனர். ஆனால் அந்த நிவாரணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மூலமாகத் தமிழக அரசுக்கு அந்த கோரிக்கையை வைக்க இருக்கிறோம்.
நான் மலை சார்ந்து வாழ்ந்ததுனால, மலைவாழ் மக்களுக்கு எதாவது செய்யணும்னு மலைவாழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தினேன். அரசியல் சூழ்ச்சி காரணமாக என்னை சிறையில் அடைத்தனர். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டேன்.வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
நான் அரசியலில் வளரக்கூடாதென்கிற காழ்ப்புணர்ச்சியால் என்னை மைசூர் சிறையில் மூன்று ஆண்டுகள் அடைத்தனர். அதன் பிறகு அந்த இயக்கத்தை நடத்த முடியாததால் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தேன்” என்றார்.