கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு தடுப்பூசி எப்போது…??

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், தொற்றி லிருந்து குணமடைந்து 3 மாதம் கழித்து 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும்; அதே நேரத்தில், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே