கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலிலிருந்து நோய் தொற்று பரவும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிர்பலிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3- ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து பொதுமக்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி,
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம்.
உடல்களை தகனம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
அரசு வழிகாட்டுதலின்படி உடல்களை கவனமாக தகனம் செய்ய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது. எனவே அச்சமும், கவலையும் தேவையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.