தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறும் ஒத்திகை நிகழ்ச்சியை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

நாடு முழுவதும் கொரோனாவால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தொற்றுநோயான இந்த கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்துதான் ஒரே வழி என அந்த மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலக நாடுகள் இறங்கின.

இந்த நிலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதற்கான ஒத்திகை நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

தடுப்பூசி வரும்போது, இந்த செயல்முறை சரியாக வேலை செய்யுமா இல்லையா? என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே இதன் நோக்கம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் தொடங்கியது.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெல்லக்கோட்டை ஆரம்ப சுகாதார மையம், நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவமனை, சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறும் ஒத்திகை நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இன்று 9 மணி முதல் 11 மணி வரை இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. சுமார் 25 நபர்களுக்கு நடைபெறுகிறது. தடுப்பூசி போட தேர்வானவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே