படத்தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு காலமானார்..!!

பிரபல தயாரிப்பாளர் கே.பாலு உடல்நல குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில், நடிகர் பிரபு , குஷ்பூ நடிப்பில் திரை உலகில் சாதனை படைத்த சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இன்றும் இந்த படம் மக்கள் மத்தியில் பேசும் படமாகவே உள்ளது.

அந்த வகையில் சின்னத்தம்பி உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த பெருமை தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலுவையே சேரும்.

இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். 

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பல உயிர்களை கொரோனா எடுத்து சென்ற நிலையில் தற்போது மீண்டும் திரையுலகை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே