தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை ரூ.3,000 கோடி உயர்த்தி வழங்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி!!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை ரூ.3,000 கோடி உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் உள்பட ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில்,

  • கொரோனா நிதியான 712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில் 3000 கோடி ரூபாயாக ஒதுக்கி நிதி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
  • கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது .
  • பி.சி.ஆர். சோதனைக்கு ஆகும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
  • பி.சி.ஆர். சோதனைக்கான செலவை பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே