#BREAKING : டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை… மத்திய உயர்கல்வி செயலர்..!!

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பல மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கும் சூழ்நிலை உருவாகவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தாலும், இதுவரை எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே ஒரு யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து வேறு எந்த மாநிலமோ யூனியன் பிரதேசங்களோ விரைவில் பள்ளிகளைத் திறப்பதற்கான சூழ்நிலையில் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாத இறுதியில் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம் இது பற்றி முடிவு செய்தாலும் கூட, அது குறித்த அறிவுறுத்தலை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்க முடியும், அந்தந்த மாநில அரசுகள், சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டிசம்பர் வரை பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு இல்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி இறுதித்தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே