பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் – அமைச்சர் சேகர் பாபு

இந்தி சம்ய அறநிலையத்துறை கோயில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேர்கர்பாபு பேட்டியளித்தார்.

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்திற்கு சுப்பிரமணியன் சுவாமு எதிர்ப்பு தெிரிவித்த நிலையில் விளக்கம் அளித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அரச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். வயது மூப்பிற்கு பின்பும் கோயில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார். 

58 அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ள பெண் முறையாக பயிற்சி பெற்றவர்.

கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. அரசியல் சட்டத்தை இந்து அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை.

மிரட்டலுக்கு பணியும் அரசு அல்ல திமுக அரசு என கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் குறித்து சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே