பழைய நிலைமைக்கே செல்லும் கரோனா பரவல்: மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் வேளையில், மாநில முதல்வர்களுடன் நாளை (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த ஆலோசனையின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிடுவது குறித்தும் பிரதமர் ஆலோசிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நேற்று பதி வான புதிய நோயாளிகள் எண் ணிக்கையில் 78 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுவரை 3 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 மாதங்களுக்கு முந்தைய நிலை..

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரப்படி, கரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 26,291 ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவே அதிகபட்ச பாதிப்பாகும். இதன் மூலம் கரோனா பரவல் 3 மாதங்களுக்கு முந்தைய நிலையைப் போல் பின்னோக்கிச் செல்கிறது.

நாட்டில் கரோனா பாதித்தோரின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. கரோனா தொற்றுக்கு புதிதாக 118 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,725 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 7,352 பேர் குணம் அடைந்துள்ளனர். இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 97 சதவீதம் ஆகும்.

அமைச்சரின் வேண்டுகோள்:

அதிகரிக்கும் கரோனா பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “சமூக இடை வெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடை முறைகளை மக்கள் பின்பற்றா ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது பாதுகாப்பு விதிமுறைகளை மக் கள் எந்த அளவுக்கு கடைபிடித் தார்களோ அதே அளவுக்கு இப் போதும் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே