நேற்று இரவில் இருந்து இன்று காலைக்குள் விழுப்புரத்தில் அடுத்தடுத்து 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலரின் கொரோனா டெஸ்ட் முடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா கேஸ்கள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

முக்கியமாக கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து தினமும் 100+ கேஸ்கள் தமிழகத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மொத்தமாக 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முதல் நாள் விழுப்புரத்தில் 86 பேருக்கு கொரோனா இருந்தது. இந்த நிலையில் நேற்று 49 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

நேற்று கொரோனா ஏற்பட்ட எல்லோரும் விழுப்புரத்தில் கோயம்பேடு சென்றுவிட்டு திரும்பியவர்கள்.

இவர்கள் எல்லோர்க்கும் கோயம்பேடு மார்க்கெட் சோர்ஸ் மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது.

அங்கு இதுவரை மொத்தமாக 3922 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது விழுப்புரத்தில் சரசரவென்று கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்றை போலவே இன்றும் விழுப்புரத்தில் கொரோனா கேஸ்கள் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது.

விழுப்புரத்தில் கொரோனாவிற்கு மொத்தம் 2 பேர் பலியாகி உள்ளனர்.

அங்கு இதுவரை 29 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய கணக்குப்படி அங்கு 121 சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் காரணமாக விழுப்புரத்தில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த 4 நாட்களாக அங்கு கோயம்பேட்டில் இருந்து வந்தவரகள் மூலம் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

அதாவது லாரி டிரைவர் தொடங்கி காய்கறி வியாபாரிகள் மூலம் கொரோனா பரவ தொடங்கி உள்ளது.

இவர்களை தொடர்பு கொண்ட இவர்களின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 820 பேர் கோயம்பேட்டில் இருந்து விழுப்புரத்திற்கு வந்துள்ளனர்.

இதில் இதுவரை 450 பேர் கண்டுபிடிக்கப்பட்டு தன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள நபர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எங்கே சென்றனர் என்று தேடப்பட்டு வருகிறது.

அவர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்று தேடப்பட்டு வருகிறது.

நேற்று கணக்குப்படி விழுப்புரத்தில் கோயம்பேடு மார்க்கெட் சென்ற 85 பேருக்கு ஏற்கனவே கொரோனா ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் நேற்று இரவில் இருந்து இன்று காலைக்குள் மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் மொத்தம் 160 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக இதுவரை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் 110 பேருக்கு விழுப்புரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் சோதனைகள் செய்யப்படும்.

இதனால் மாலைக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

இதனால் விழுப்புரத்தில் மொத்தம் 27க்கும் மேற்பட்ட கிராமங்களை மொத்தமாக லாக் செய்துள்ளனர். மக்கள் உள்ளேயும், வெளியேயும் செல்லாதபடி மொத்தமாக லாக் செய்துள்ளனர்.

அங்கு கோயம்பேடு சென்ற எல்லோரையும் தேடி கண்டுபிடித்து சோதனை செய்ய உள்ளனர். விழுப்புரத்தில் வரும் நாட்களில் கொரோனா சோதனைகள் அதிகரிக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே