இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26.47 லட்சமாக உயர்வு… 50,000த்தை தாண்டிய உயிரிழப்புகள்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,921 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19,19,843 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது வரை கொரோனாவால் பாதித்த 6,76,900 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 3,00,41,400 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 7,31,697 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே