மின்னல் தாக்கியதில் உலக அதிசயமான தாஜ்மஹாலின் மேற்கூரை சேதமடைந்தது.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹால் உள்ளது.
முகாலய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான இது சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் உ.பி.யில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நேற்று பலத்த இடி மின்னலுடன் பெய்த மழையில் தாஜ்மஹாலின் வடக்குப்பகுதி நுழைவு வாயிலில் உள்ள பளிங்குகற்களால் ஆன மேற்கூரை இடிந்து சேதமடைந்ததாகவும்; ஆனால் பிரதான பகுதியில் உள்ள கட்டடங்கள் எந்தவித சேதமடையவில்லை என இந்திய தொல்லியியல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதே போன்று கட.ந்த 2018-ம் ஆண்டு இடிமின்னலுடன் பெய்த கனமழையால், தாஜ் மஹாலின், ராயல் கேட் மற்றும் தெற்கு பகுதி நுழைவாயில் துாண்கள் இடிந்து விழுந்தன.