நவம்பர் வரை கோதுமை ப்ரீ…! அரிசி கம்மி…! ரேஷன் கடைகளுக்கு கட்டாய உத்தரவு

சென்னை: நவம்பர் மாதம் வரை ரேஷனில் ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

ஊரடங்கு காரணமாக கடந்த 4, 5 மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நலன்களுக்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்க உணவுப்பொருள் வழங்கல் துறையானது உத்தரவிட்டு இருக்கிறது.

அதிலும் முக்கியமாக  விரும்பும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், அப்படி கோதுமையை வழங்கும்போது இலவச அரிசி அளவில் குறைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே