முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தொடக்கத்தில் மிகக்குறைவாக இருந்த பரவல் வேகம் தற்போது அதிகரித்துகொண்டே செல்கிறது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோய் பரவலை தடுக்க மத்திய,மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என வைரஸ் தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை.தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, நாளை முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் அபாயகரமான நிலையில் பரவி வருகிறது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே