தமிழகத்தில் இன்று (டிச.27) 1,009 பேருக்கு கொரோனா..; 10 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், சிசிச்சை பெறுபவரகளின் எண்ணிக்கையும் முன்பை ஒப்பிடும் போது வெகுவாக குறைந்துவிட்டது.

தற்போதைய நிலையில் பரவும் வேகம் குறைந்துள்ளதுடன், மிகக்குறைவான நபர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரம் கடந்த மாதத்தை ஒப்பிடும் போது பெரிய அளவில் பாதிப்பு எல்லா மாவட்டத்திலும் குறைந்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,947 பேர் சிசிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று கொரோனா தொற்றால் 10 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12069 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 290 பேர், கோவையில் 94 பேர், செங்கல்பட்டில் 67 பேர், திருவள்ளூரில் 48 பேர், திருப்பூரில் 40 பேர், ஈரோட்டில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 35 பேர், சேலத்தில் 37 பேர், திருச்சி மற்றும் வேலூரில் தலா 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில்20க்கும் கீழாக உள்ள நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே