சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்..!!

ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். 

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரத்த அழுத்த மாறுபாடு சீராகி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் இருந்து இன்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மேலும், ரஜினிகாந்த் ஒரு வாரத்திற்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும். இரத்த அழுத்தத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

உடல் உழைப்பை குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் சென்னை புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

இதனிடையே, புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்து வரும் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது உடல்நிலை தேறி சென்னை வந்துள்ள ரஜினிகாந்த் மருத்துவர்களின் அறிவுரைப்படி கட்சி பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே