உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியது.
முதலில் சீனாவைப் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்குப் பரவியது. 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தத் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்த நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டி 85,445 ஆக உயர்ந்துள்ளது.
உலகம்:
பாதித்தோர் எண்ணிக்கை: 14,68,838
பலியானோர் எண்ணிக்கை: 85,445
குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,16,482
அமெரிக்காவில் 13 ஆயிரத்தைத் தாண்டியது பலி
பாதித்தோர் எண்ணிக்கை: 4,06,644
பலியானோர் எண்ணிக்கை: 13,088
குணமடைந்தோர் எண்ணிக்கை: 22,033
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 938 பேர் பலி
பாதித்தோர் எண்ணிக்கை: 60,733
பலியானோர் எண்ணிக்கை: 7,097
குணமடைந்தோர் எண்ணிக்கை: 135
ஸ்பெயின்:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,46,690
பலியானோர் எண்ணிக்கை: 14,673
குணமடைந்தோர் எண்ணிக்கை: 48,021
இத்தாலி:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,39,422
பலியானோர் எண்ணிக்கை: 17,669
குணமடைந்தோர் எண்ணிக்கை: 26,491
பிரான்ஸ்:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,09,069
பலியானோர் எண்ணிக்கை: 10,328
குணமடைந்தோர் எண்ணிக்கை: 19,337
ஜெர்மனி:
பாதித்தோர் எண்ணிக்கை: 1,09,329
பலியானோர் எண்ணிக்கை: 2,096
குணமடைந்தோர் எண்ணிக்கை: 36,081