கொரோனாவால் சென்னையை விட கோவை மாவட்டத்தில் அதிக பாதிப்பு..!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 475 பேர் கரோனா தொற்று பாத்திப்பால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தினசரி பாதிப்பில் சென்னையை விட கோவையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 33,764 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்கு 475 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 29,717 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 3,10,224 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மே மாதத்தில் உச்சத்தை எட்டியது. இதனால் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது மேலும் குறையத் தொடங்கி உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 3,561 பேருக்கு தொற்று உறுதியாதி செய்யப்பட்டுள்ளது. 98 பேர் உயிரிழந்துள்ளனர். 5, 223 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். சென்னை முழுவதும் 45,738 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.91 லட்சமாக உள்ளது. இவர்களில் 4.38 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,644 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக அண்ணாநகரில் 5,004 பேரும், அம்பத்தூரில் 4,551 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தினசரி பாதிப்பில் சென்னையை விட கோயம்புத்தூரில் அதிகரித்துள்ளது. கோயம்புத்தூரில் 4,268 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. . 31 பேர் உயிரிழந்துள்ளனர். 2,787 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 35,707 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே