உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,00,623 ஆக உயர்வு!

சர்வதேச அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, “இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,02,170 ஆக உள்ளது.

உலகம் முழுக்க தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 69,76,045 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,11,784 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 53,586க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனாவால் இறந்தவர்கள் அதிகமான பட்டியலில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. 

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 1,12,0965 பேர் இறந்துள்ளனர்.

கரோனா தொற்று பலி எண்ணிக்கையில் ஒரு லட்சத்தைத் தாண்டிய ஒரே நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் 40,465 பேர் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். அதே போல பிரசிலில் 36,044 போ கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

உலக நாடுகளின் கரோனா பலி எண்ணிக்கை:

இத்தாலி -33,846 பேர் பலி,
பிரான்ஸ் -29,142 பேர் பலி
ஸ்பெயின் – 27,135 பேர் பலி
மெக்ஸிகோ- 13,511 பேர் பலி
பெரு – 5,301 பேர் பலி
ஜெர்மனி- 8,769 பேர் பலி
ஈரான் -8,209 பேர் பலி
துருக்கி -4,669 பேர் பலி
சிலி – 1,541 பேர் பலி

இந்தியாவை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் பலியாகியுள்ளதால் உயிரிழப்பு 6929 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே