இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் – ட்விட்டர் நிறுவனம்

இந்தியா எப்போதும் கருத்துரிமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து வருவதாக மத்திய அரசு சுட்டுரை நிறுவனத்திற்கு பதிலளித்துள்ளது.

சுட்டுரை நிறுவனத்தின் அலுவலகத்தில் தில்லி சிறப்பு காவல்படையினர் திடீர் சோதனை நடத்திய நிலையில் இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்தியா எப்போதும் கருத்துரிமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுட்டுரை நிறுவனம் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் தெரிவித்துள்ள மத்திய அரசு நாட்டில் சட்டத்தை உருவாக்குவதும் கொள்கைகளை வகுப்பதும் இறையாண்மையுள்ள நாட்டின் முழு உரிமையாகும் என பதிலளித்துள்ளது.

இந்தியாவில் சுட்டுரை உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்கள் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே