கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி மீனவ மக்களின் ஓட்டுகளை பெற திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரியில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.

