வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டியதாக 3 பேர் சஸ்பெண்ட்..!!

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வால்பாறை சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவீன பார்வையாளர் ராம்கிருஷ்ண கேடியா, தான் கொடுத்த அறிக்கையை சரிபார்க்கும்படி பறக்கும்படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவை அவர்கள் 2 மணி நேரமாகியும் செயல்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

இதனையடுத்து வடக்கு வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்ட மூவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே