இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்கள் எடுத்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது.

வாஷிங்டன் (33), அஷ்வின் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர், அஷ்வின் ஜோடி முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

ஜாக் லீச் பந்தில் வாஷிங்டன் ஒரு பவுண்டரி அடிக்க, அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது லீச் பந்தில் அஷ்வின் (31) அவுட்டானார். ஷாபாஸ் நதீம் (0), இஷாந்த் சர்மா (4), பும்ரா (0) நிலைக்கவில்லை.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பும்ரா (85) அவுட்டாகாமல் இருந்தார்.

இங்கிலாந்து சார்பில் டாம் பெஸ் 4, ஆண்டர்சன், ஆர்ச்சர், லீச் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்தியாவிற்கு ‘பாலோ-ஆன்’ தராமல் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் பந்திலேயே அஷ்வின் செக் வைத்தார்.

பெர்ன்ஸ் ‘டக் அவுட்’ ஆகி வெளியேறினார். உணவு இடைவெளியின் போது இங்கி., அணி 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்து 242 ரன்கள் முன்னிலை பெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே