BREAKING : கல்கி சாமியாரிடம் நடைபெற்ற வருமான வரிசோதனை நிறைவு – ரூ.44 கோடி பறிமுதல்

கல்கி ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று இரவோடு முடிந்தது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமார்.

இவர், தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்டு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

இந்த குழுவினர் நடத்தும் பல்வேறு பயிற்சிகள் வெளிநாடுகளில் வாழும் மக்களையும் வெகுவாக கவர்ந்து அதில் உறுப்பினர்களாக சேர்க்க வைத்தது.

அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் வருவாய் வந்தது. இந்த வருவாய் ஆந்திரா மற்றும்  தமிழகத்தில் பெருமளவில் நிலத்தில் முதலீடு செய்தது. வெளிநாடுகளிலும் அதேபோல அதிக அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் வரதய்யபாளையம், ஹைதரபாத், பெங்களூர், சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்களாக சோதனை நடத்தினர்.

கல்கி ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று இரவோடு முடிந்தது.

கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். கல்கி  ஆசிரமத்திற்கு 4,000 ஏக்கர் நிலம் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

துபாய், ஆபிரிக்கா, பிரிட்டிஷ், வெர்ஜின் தீவுகளில் ரூ.100 கோடி அளவுக்கு முதலீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.44 கோடி ரொக்க பணம், ரூ.20 கோடி அமெரிக்க டாலர், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஹவாலா முறையிலும் கல்கி ஆசிரமம் பணபரிமாற்றங்களை செய்துள்ளது.

கல்கி என்கிற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் ப்ரீதா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார்  தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே