கொரோனா தேவி சிலையுடன் ஒப்பீடு – கொந்தளித்த வனிதா விஜயகுமார்..!!

கொரோனா தேவி சிலை தன்னைப் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டதைப் பார்த்து கடுப்பாகியிருக்கிறார் நடிகை வனிதா விஜயக்குமார்.

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு 36,000 கடந்துள்ளது.

இதனால் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவையில் உள்ளவர்கள் கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கொரோனா தேவி சிலை, வனிதா விஜயக்குமார் மாதிரி இருப்பதாகக் கூறி, இரு படத்தையும் இணைத்து, அதை வனிதாவுக்கு டேக் செய்தும் வந்தனர் நெட்டிசன்கள். இதைப் பார்த்த வனிதா விஜயக்குமார், ’எல்லோரும் ஏன் இதை எனக்கே ஷேர் செய்கிறீர்கள்” என கடுப்பாகி கேட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே