மாபெரும் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாக வேண்டும் : சங்கரய்யா பேச்சு

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து ஒரு மகத்தான சக்தியாக இந்தியாவில் உருவாக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதின் நூறாவது ஆண்டு தொடக்க விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய மூத்த உறுப்பினர் சங்கரய்யா, சோசியலிச இயக்கங்களால் மட்டுமே தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே