துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வேட்புமனுவில் தாக்கல் செய்த அவரது சொத்து மதிப்பை விட தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
அவரது அசையும் சொத்து 843 சதவீதம் உயர்ந்துள்ளது. 2016ல் பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து ரூ.55 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.5.19 கோடியாக உள்ளது.
அதேபோல், அசையா சொத்தும் 169 சதவீதம் உயர்ந்துள்ளது. 2016ல் ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், அவருக்கு பூர்வீக சொத்து, நிலங்கள் எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.