ஹெலிகாப்டரை மீட்ட விமானப் படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்

உத்தரகண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் மீட்டுச் சென்றது.

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் ஹெலிபேடு அருகே விபத்துக்குள்ளான தனியார் ஹெலிகாப்டரை, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

டேராடூன் அருகே உள்ள சஹஸ்ட்ரதாரா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கேதர்நாத் ஹெலிபேடு பகுதியில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

அதிலிருந்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சுமார் 11 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை, கீழே கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாததால், யூடிஏர் எனும் அந்த நிறுவனம் இந்திய விமானப் படையின் உதவியை நாடியது.

இதையடுத்து விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ஹெலிகாப்டர், கேதர்நாத் ஹெலிபேடில் நின்றிருந்த சேதமடைந்த ஹெலிகாப்டரை மீட்டு பள்ளத்தாக்கு பகுதிக்கு கொண்டு வந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே