ஓடும் ரயிலில் பயணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள்..!!

ஓடும் ரயிலில் திடீரென பிரசவ வலி வந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் ஆகியோர் மேற்குவங்கத்தில் இருந்து அகமதாபாத் சென்றுகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது திடீரென ரயிலில் வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டது. 

தகவலறிந்த ராணுவ மருத்துவர்கள் ஓடும் ரயிலிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்.

மருத்துவர்களின் செயலை பாராட்டும் வகையில் இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த செய்தியையும், புதிதாக பிறந்த அழகிய குழந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே