தமிழகத்தில் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும்; தமிழக காங்.பொறுப்பாளர் குண்டுராவ்..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன.

குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி அதே கூட்டணியில் நீட்டிக்குமா? அல்லது போதுமான தொகுதி கிடைக்காமல் கூட்டணி மாறுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனி அணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றனர் என்பதே செய்தியாக உள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். 

இதையடுத்து தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்துள்ளார்.

அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குண்டுராவ் தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சிதான் என்றும் வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கட்சி ஆரம்பித்த நாள் முதலே கூட்டணி ஆட்சியை விரும்பாத திமுக, தற்போது மட்டும் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே