இந்திய விமானப்படையில் பணியாற்றும் லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங், இந்தியா விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும், மேம்படுத்தபட்ட வசதிகளை கொண்ட ரஃபேல் விமானத்தை இயக்கும் முதல் பெண் ஆவார்.

அவருக்கு தரப்பட இருக்கும் கன்வெர்ஷன் பயிற்சி முடிக்கப்பட்டவுடன், இந்தியாவின் கோல்டன் ஏரோவ்ஸ் ஸ்குவார்டனில் இணைந்து, ரஃபேல் போர் விமானத்தை இயக்க உள்ளார்.

வாரணாசியை பூர்வீகமாக கொண்ட இவர் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் படித்தார்.

இந்திய விமானப்படையில் தற்போது 10 பெண் போர் விமானிகள் உள்ளனர்.

இதில் ஷிவாங்கி சிங் மிக்21எஸ் விமானத்தை ஓட்டி பயிற்சி பெற்றவர். 

உலகிலேயே மிகவும் அதிகமான லேண்டிங் மற்றும் டேக்-ஆஃப் ஸ்பீட் கொண்ட போர்விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் கடந்த மாதம் அம்பலா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டது.

ரஃபேல் விமானங்கள் இணைப்பு நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே