சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனிடையே

கடந்த 24 ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

தற்போது நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. 

இதை தொடர்ந்து ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.

இருப்பினும் இதுகுறித்து தமிழக முதல்வர் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே