குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு எதிரான போர்..! – கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது விழுந்த அடி, ஜனநாயகத்தின் மீதான அடி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் கவிதையை வாசித்து தனது செய்தியாளர் சந்திப்பை கமல்ஹாசன் தொடங்கினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், வாக்கு வங்கிக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு எதிரான போர் என கூறிய கமல்ஹாசன் பாகிஸ்தான் இந்துக்களுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கை இந்துக்களுக்கு வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், மாணவர்கள் மீது விழும் அடி, கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்றார்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு அளித்த அதிமுகவும், பாமகவும், தமிழினத்திற்கும், தேசத்திற்கும் துரோகம் செய்துவிட்டதாக கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே