பேராசிரியர் நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற புகார் தொடர்பான வழக்கில் உதவி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீனை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் உதவி பேராசிரியராக இருந்த நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக வில்லை எனக் கூறப்படுகிறது.

நிர்மலா தேவிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை என்றும் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள் நிர்மலாதேவி முறையாக நேரில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனிடையே வழக்கு 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே