குடியுரிமை போராட்டம்: மங்களூரு, லக்னோவில் வன்முறை…!

மங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது அம்மாநில போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஜலீல், நவ்ஷீன் ஆகிய இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் மங்களூரு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்க மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மங்களூரில் நாளை மறுநாள் நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு, லக்னோவில் வன்முறை…!

மங்களூரு மற்றும் தக்சினா கன்னடா மாவட்டங்களில் இணையதள சேவை 48 மணி நேரத்திற்கு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகமது வகீல் என்பவர் குண்டடிபட்டு உயிரிழந்தார்.

மங்களூரு, லக்னோவில் வன்முறை…!

இதனிடையே கர்நாடகாவில் நிகழ்ந்த காரணத்தில் துரோகிகளே காரணம் என அம்மாநில உள்துறை அமைச்சர் பசவ ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டத்தில் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தவர்கள் ஊடுருவி இருப்பதாகவும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே