நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் – கமல்ஹாசன் அறிவிப்பு..!!

மக்கள் நீதி மையம் கூட்டணியில் மற்ற கட்சிகள் இணைந்தாலும் தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைமையகத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஐஜேகே துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபு ஆகியோர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மார்ச் 1 முதல் வேட்பாளர் தேர்வு நடைபெற உள்ளதாகவும், மார்ச் 3 முதல் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே