100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி..!!

மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிய வேண்டிய வேலைகள், ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகின்றன என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்யாதவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்றும்; அதற்கு அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நூறுநாள் வேலை திட்டத்தில் அதிகாரிகள் நிதி மோசடியில் ஈடுபட்டால், பணியாளர்கள் வேலை பார்க்காமல் மோசடி செய்கின்றனர் என்று கூறினர்.

இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிய வேண்டிய வேலைகள், ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே