பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நலம் பெற சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பிரார்த்தனை!

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட.

யாரையும் எடுத்தெறிந்து பேசாதவர், அடுத்தவர்களையும் மதிக்கும் பண்பு உடையவர். இந்த கொரோனா காலத்தில் கூட வீட்டில் இருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை பாடி அதன் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு கொடுத்து உதவினார்.

அப்படிப்பட்ட அவர் இப்போது கொரோனா நோய் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக உள்ளார்.

அவரை நல்லபடியாக குணமாக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

அதேசமயம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் பலரும் அவர் நலமாக வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ரஹ்மான் டுவிட்டரில், ”அனைத்து இசை ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். லெஜெண்ட் சிங்கர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாகவேண்டி என்னுடன் இணைந்து கடவுளை வேண்டுங்கள். தனது அற்புதமான குரலால் பல மகிழ்வுகளை தந்தவர் என பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா, ”என் நண்பன் பாலு தன்னம்பிக்கையானவன், வலிமையானவன். அவன் தொழும் தெய்வங்களும், நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும். மீண்டு வருவான் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில், ”சீக்கிரம் நலமாகி வாருங்கள் எஸ்.பி.பி. நீங்கள் விரைந்து குணமாக கடவுளை வேண்டுகிறேன்” எனபதிவிட்டுள்ளார்.

சவுந்தர்யா ரஜினி

ரஜினியின் மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, ”சீக்கிரம் நலமாகி வாருங்கள் எஸ்.பி.பி” என பதிவிட்டுள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் டுவிட்டரில், ”பாடும் கடவுள் எஸ்.பி.பி. நீங்கள் நலமுடன் திரும்பி வருவீர்கள். அவர் நலமாக அனைவரும் கடவுளிடம் வேண்டுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தனுஷ்

நடிகர் தனுஷ் டுவிட்டரில், ”எஸ்.பி.பி. அவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என தெலுங்கில் பதிவிட்டுள்ளார்.

அதைப்போல, பாடகர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகர் பிரசன்னா, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சுனைனா, கிரிக்கெட் வீரர் அஸ்வின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் பாடகர் பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி பதிவிட்டுள்ளனர். 

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே