அடி பணிந்தது சீனா – பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு அழைப்பு

லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சீனத் தரப்பிலும் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக லடாக் விவாகரத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

எல்லைப் பிரச்னைக்காக இந்தியாவுடன் மேலும் சண்டையிட விரும்பில்லை என்றும் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 413 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே